மண்கும்பானைச் சேர்ந்த,திரு திருமதி மகேந்திரன்-திலகா தம்பதிகளின் அன்புப் பேத்தி செல்வி ஓவியா அவர்களின் பூப்புனித நீராட்டு விழா கடந்த 04.09.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பரிஸில் நடைபெற்றது.
அன்றைய தினம் அல்லையூர் இணையத்தின் அறப்பணிச் சேவைக்னெ 50ஆயிரம் ரூபாக்களை-திரு திருமதி மகேந்திரன்-திலகா தம்பதிகள் வழங்கியிருந்தனர்.
இப்பணத்தில் கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு 04.09.2016 அன்று மதிய சிறப்புணவு வழங்கப்பட்டது.மேலும் வறுமையில் வாடிய ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபாக்கள் பெறுமதியான உலர் உணவுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.
எமது இணையத்தின் மீது நம்பிக்கை வைத்து- 50ஆயிரம் ரூபாக்களை வழங்கிய திரு திருமதி மகேந்திரன்-திலகா தம்பதிகளுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அல்லையூர் இணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட- செல்வி ஓவியா அவர்களின் பூப்புனித நீராட்டு விழாவின் நிழற்படங்கள் சிலவற்றினை கீழே இணைத்துள்ளோம்.