2006ஆண்டு முதல்2009 வரை 11 படுகொலைகளைச் செய்த பாதகன் கைது!

11 படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2006ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் குறித்த நபர் 11 படுகொலைச் சம்பவங்களை மேற்கொண்டுள்ளதாகவும் கொலை செய்யப்பட்டவர்களில் மூன்று பேர் பொலிஸார் எனவும் குறிப்பிடப்படுகிறது.

கொஸ்வத்த பிரதேசத்தில் வைத்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மிக நீண்ட காலகமாக குறித்த நபர் தலைமறைவாக வாழந்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 


Leave a Reply