93 கன்னிப் பெண்கள் கல்யாணத்திற்கு முன் கர்ப்பம் யாழ்ப்பாணத்திலிருந்து அதிர்ச்சி தகவல்

யாழ். மாவட்டத்தில் கடந்த வருடம் குறைந்தது 93 பெண்கள் ஏமாற்றப்பட்டு திருமணத்துக்கு முன்னர் கர்ப்பம் தரித்திருக்கின்றார்கள் என்று யாழ்.போதனா வைத்தியசாலையில் இயங்கி வரும் பால் நிலை வன்முறைகளுக்கு எதிரான நிலையம் அறிவித்துள்ளது.

வீட்டு வன்முறைகள் காரணமாக 218 பெண்களும், உள, சமூக, பொருளாதார பாதிப்புக்கள் காரணமாக 58 பெண்களும், திருமண பந்தம் அடிப்படையிலான தொடர்பால் ஏற்பட்ட பாதிப்பால் 10 பெண்களும், பாலியல் துஸ்பிரயோகத்தால் 05 பெண்களும் ,சட்ட விரோத கருக்கலைப்பால் 04 பெண்களும், பாலியல் வல்லுறவால் 09 பெண்களும் கடந்த வருடம் குறைந்தது பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று இந்நிலையம் புள்ளிவிபரம் 
வெளியிட்டுள்ளது.
நல்லூர் 58 பெண்களும், யாழ்பாணத்தில் 57 பெண்களும், கோப்பாயில் 51 பெண்களும், சங்கானையில் 47 பெண்களும், சாவச்சேரியில் 36 பெண்களும் , உடுவிலில் 28 பெண்களும், தெல்லிப்பளையில் 19 பெண்களும், கரவெட்டியில் 16 பெண்களும், பருத்தித்துறையில் 11 பெண்களும், வேலணையில் 10 பெண்களும், காரைநகரில் 07 பெண்களும், நெடுந்தீவில் 01 பெண்ணும் அக்காலப்பகுதியில் குறைந்தது பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்றும் அது பிரதேச ரீதியில் தகவல்களை தந்துள்ளது.
யாழ்.மாவட்டத்தில் திருமணத்துக்கு முன்னர் பெண்கள் கர்ப்பமடைந்து இருக்கின்றமைக்கு பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றமை அல்லது காதலனால் ஏமாற்றப்பட்டிருக்கின்றமை பிரதான காரணமாக கூறப்பட்டிருக்கின்றது. பால் நிலை அடிப்படையிலான வன்முறைகளால் ஆண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் நிலையம் சுட்டிக்காட்டி உள்ளது

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux