யாழ்.மருதனார் மடத்தில் வாகன விபத்து! ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம்-மருதனார்மடத்தில் காங்கேசன்துறை வீதியை ஒட்டிய ஆலடிச் சந்தியில் இன்று இரவு 7.15 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமுற்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்திசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

மோட்டார் சைக்கிள் ஒன்றும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்தவரே காயங்களுக்கு உள்ளானார். மோட்டார் சைக்கிளும், வானும் சேதம் அடைந்து விட்டன. இவ்விபத்துத் தொடர்பாக சுன்னாகம் பொலிஸ் நிலைய பொலிஸார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.
அத்துடன் விபத்துக்கு உள்ளாகிய வாகனங்களையும் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார்கள்.

Leave a Reply