கோப்பாயில் கோரவிபத்து அனலைதீவு வாலிபர் பலி ஒருவர் படுகாயம்!

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இரு இளைஞர்களில் ஒருவர் பலியானமையுடன் மற்றவர் படுகாயமடைந்துள்ளார்.
கோப்பாய் ராச வீதியில் மதியம் 2.30 மணியளவில் உழவு இயந்திரமொன்றுடன் இம்மோட்டார் சைக்கிள் மோதியது.

 மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இவ்விபத்தில் 25 வயதான நிர்மலன் என்பவர் உயிரிழந்தார். மற்றவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Leave a Reply