யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த கோரவிபத்து!நால்வர் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் முச்சக்கர வண்டி சாரதி உட்பட நால்வர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
மருதனார் மடம் காங்கேசன்துறை வீதியில் இராமநாதன் கல்லூரிக்கு அண்மையாக பகல் 10.45 மணியளவில் இந்த விபத்து இடம் பெற்றது.

 சுன்னாகத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி மற்றும் வான் யாழ்ப்பாணத்தில் இருந்து சுன்னாகம் நோக்கி வந்த பஸ் ஆகியன மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.
சுன்னாகத்தில் இருந்து சென்ற தனியார் ஒப்பந்தகாரர் ஒருவரின் வான் வீதியில் திடீரென நிறுத்தப்பட்டது. அதையடுத்து அவ்வானின் பின்னால் வந்த முச்சக்கரவண்டி வானுடன் மோதியுள்ளது.
அத்துடன் எதிர்ப் பக்கத்தில் இருந்து வந்துகொண்டிருந்த பஸ் வண்டியுடன் மோதியுள்ளது. இதனால் முச்சக்கரவண்டியின் சாரதி உட்பட நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply