நாள் ஒன்றில் சராசரியாக 12 பேர் தற்கொலை அதிர்ச்சி தகவல்

இலங்கையில் நாள் ஒன்றில் சராசரியாக 12 பேர் தற்கொலை செய்து கொள்வதாக சிறீலங்கா சுமித்ரயோ என்ற அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

உலக அளவில் தற்கொலைகளின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

உலகளாவிய ரீதியில் வருடமொன்றில் குறைந்தபட்சம் ஒரு மில்லியன் பேர் தற்கொலை செய்து கொள்வதாகவும் ஒவ்வொரு நாற்பது செக்கனுக்கு ஒரு தடவையும் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. Leave a Reply