தமிழ் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழா வவுனியாவில் 18.09.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இடம்பெற்றது .
வவுனியா ஓமந்தையிலிருந்து ஆரம்பமான சைக்கிள் ஓட்டப் போட்டியை வடமாகாண சுகாதார அமைச்சர் ஆரம்பித்து வைத்திருந்தார்.
ஞாயிறு காலைமுதல் ஆரம்பமான விளையாட்டு விழா வவுனியா நகர சபை மைதானத்தில் பிற்பகல் வரை சிறப்பாக இடம்பெற்றது.
உயிரிழை அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள -இந்த விளையாட்டு விழாவில்- உடற்பாதிப்புகுட்பட்ட, உளப்பாதிப்புக்குட்பட்ட பல வகைப்பட்ட மாற்றுத் திறனாளிகள் களமிறங்கியிருந்தனர்.
இந்தப் போட்டிகளில், வட மாகாணத்தில் வாழும் மாற்றுத் திறனாளிகள் பலர் பெரும் ஆர்வத்தோடு கலந்துகொண்டதுடன், நடைபெற்ற-பல்வேறு போட்டிகளிலும் ஆண் பெண் மற்றும் வயது வேறுபாடின்றி ஆர்வத்துடன் மாற்று திறனாளிகள் பங்குபற்றினர்.
இவர்களுடன் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழ்மாற்று திறனாளிகள் பலரும் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அல்லையூர் இணையத்தின் அறப்பணிக் குடும்பத்தைச் சேர்ந்த,திரு வி.குருபவராஜா அவர்கள் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று-மூன்று மெடல்களும்-ஒரு பரிசுக் கோப்பையும் பெற்றுக் கொண்டார்.மோட்டார் சைக்கிள் சாகசம் மற்றும் ஈட்டி எறிதல்-ஓட்டம் ஆகியவற்றிலேயே பரிசுகளைப் பெற்றுக் கொண்டதாக எமது இணையத்திற்கு தெரிவித்தார்.
அவரை,எமது இணையத்தின் சார்பில்-பாராட்டி வாழ்த்துகின்றோம்.