வேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி செல்லத்துரை பராசக்தி அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையில் மகாதேவா மாணவர்கள்-வீடியோ-படங்கள் இணைப்பு!

வேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி செல்லத்துரை பராசக்தி அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையில் மகாதேவா மாணவர்கள்-வீடியோ-படங்கள் இணைப்பு!

aa-37-1

பிரான்ஸில் காலமான-வேலணை கிழக்கைச் சேர்ந்த,அமரர் திருமதி  செல்லத்துரை பராசக்தி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வும்- ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும்-18.09.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று  வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மன் ஆலய-தில்லையம்பலம் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

அன்னாரின் பிரார்த்தனை நிகழ்வில்-கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்கள்  150 பேர்க லந்து கொண்டதுடன் -மேலும் வேலணை  மத்திய கல்லூரி தங்கு விடுதியில் வசிக்கும்  மாணவர்களும்  கலந்து கொண்டது சிறப்பு  நிகழ்வாக அமைந்தது.

இம்மாணவர்களை மகிழ்விக்கும் நோக்கோடு-அமரர் திருமதி செல்லத்துரை பராசக்தி அம்மா அவர்களின் குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில்-தீவகத்தின் பிரதான சுற்றுலாப் பகுதியான-அல்லைப்பிட்டி மற்றும் சாட்டி வெள்ளைக்கடற்கரை மற்றும் தீவகத்தின் முக்கிய பகுதிகள் அனைத்தும் மாணவர்களுக்கு சுற்றிக் காண்பிக்கப்பட்டன.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும்-அல்லையூர் இணையத்தின் அறப்பணிக் குடும்பத்தைச் சேர்ந்த திரு இ.சிவநாதன் அவர்கள்  முன்னின்று செயற்படுத்தினார்.

ஆதரவற்ற-மாணவர்களை அழைத்து   மகிழ்ந்திட வேண்டும்-என்ற  உயர்ந்த நோக்கோடு நடைபெற்ற-அமரர் திருமதி செல்லத்துரை பராசக்தி அம்மா அவர்களின் நினைவுநாள் நிகழ்வு-மேலும் பல இரக்கமுள்ள இதயங்களை -நாமும் இப்படிச் செய்திட வேண்டும் என்று இனி வரும் காலங்களில் எண்ணத்  தூண்டும் என்று திடமாக நம்புகின்றோம்.

தீவகத்தில்….நயினாதீவு,அனலைதீவு,புங்குடுதீவு,வேலணை,மண்கும்பான் ஆகிய பல இடங்களில் மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன அல்லது அமைக்கப்பட்டு வருகின்றன-என்பதனையும் சுட்டிக்காட்ட  விரும்புகின்றோம்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-எல்லாம் வல்ல வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மனை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

z-1 z-2 z-3 z-4 z-6 z-5 z-7 z-9 z-10 z-11 z-12 z-13 z-14 z-15 z-16 z-17 z-18 z-20 z-21 z-22 z-23 z-24 z-25 z-26 z-27 z-28 z-29 z-30 z-31 z-32 z-33 z-34 z-35 z-37 z12

Leave a Reply

}

Hit Counter provided by technology news