பிரான்ஸில் காலமான-வேலணை கிழக்கைச் சேர்ந்த,அமரர் திருமதி செல்லத்துரை பராசக்தி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வும்- ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும்-18.09.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மன் ஆலய-தில்லையம்பலம் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
அன்னாரின் நிகழ்வில்-கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்கள் 150 பேர்க லந்து கொண்டது -மேலும் சிறப்பு நிகழ்வாக அமைந்தது.
இம்மாணவர்களை மகிழ்விக்கும் நோக்கோடு-அமரர் திருமதி செல்லத்துரை பராசக்தி அம்மா அவர்களின் குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில்-தீவகத்தின் பிரதான சுற்றுலாப் பகுதியான-சாட்டி வெள்ளைக்கடற்கரை மற்றும் முக்கிய பகுதிகள் அனைத்தும் மாணவர்களுக்கு சுற்றிக் காண்பிக்கப்பட்டன.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும்-அல்லையூர் இணையத்தின் அறப்பணிக் குடும்பத்தைச் சேர்ந்த திரு இ.சிவநாதன் அவர்கள் முன்னின்று செயற்படுத்தினார்.
ஆதரவற்ற-மாணவர்களை அழைத்து மகிழ்ந்திட வேண்டும்-என்ற உயர்ந்த நோக்கோடு நடைபெற்ற-அமரர் திருமதி செல்லத்துரை பராசக்தி அம்மா அவர்களின் நினைவுநாள் நிகழ்வு-மேலும் பல இரக்கமுள்ள இதயங்களை -நாமும் இப்படிச் செய்திட வேண்டும் என்று இனி வரும் காலங்களில் எண்ணத் தூண்டும் என்று திடமாக நம்புகின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-எல்லாம் வல்ல வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!