நல்லூர் தேர்த் திருவிழாவில் ஆறு தங்க நகைகள் திருட்டு! இந்தியப் பெண் ஒருவரும் கைது

நல்லூர் ஆலய தேர்த் திருவிழாவில் கலந்து கொண்ட ஆறு அடியவர்களின் தங்க நகைககள் திருடப்பட்டுள்ளன. சுவாமி தேரில் ஏறி வெளி வீதி உலா வரும் வேளையில் அடியவர் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவ்வேளையில் 
இத்திருட்டுக்கள் இடம் பெற்றுளளன.

கடந்த காலங்களில் நல்லூர்த் தேர்த் திருவிழாக்களின்போது எழுபத்தைந்துக்கும் குறையாத திருட்டுக்கள் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால் ஒப்பீட்டளவில் இவ்வருடம் குறைந்தளவில் திருட்டுக்கள் இடம் பெற்றிருக்கின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இத்திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவாகள் எனச் சந்தேகிக்கப்படும் ஐந்து பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் ஒருவர் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply