பிரபல திரைப்பட நடிகர் முரளி இன்று காலை சென்னையில் காலமானார்.

பிரபல திரைப்பட நடிகர் முரளி இன்று காலை சென்னையில் காலமானார். தமிழ்ப்படங்களில் நாயகனாக நடித்து வந்த முரளி (வயது 47), மாரடைப்புக் காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்பே அவரின் உயிர் பிரிந்தது.
பூவிலங்கு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானவர் முரளி.

இதயம்,புதுவசந்தம்,பொற்காலம், காலமெல்லாம் காதல் வாழ்க, வெற்றிக்கொடி கட்டு என்று பல சூப்பர் ஹிட் படங்களைத் தந்த முரளி என்றும் மார்க்கண்டேயன் என்பது மாதிரி இதயம்படத்தில் பார்த்தது போலவே இப்போதும் இளமையாக இருந்துவந்தார்.
கடல்பூக்கள், தேசிய கீதம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து வந்த இவரது மகன் ஆதர்வா நாயகனாக நடித்த ‘பாணா காத்தாடி’திரைப்படம் தற்போது வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இவரது மறைவையொட்டி, சினிமா துறையினர் மற்றும் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux