சட்டவிரோத மின் பாவனையில் ஈடுப்பட்டவர்களுக்கு 28 இலட்சம் ரூபா அபராதம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத மின் பாவனையில் ஈடுபட்ட 136 பேருக்கு 28 இலட்சம் ரூபா அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி வீ.இராமகமலன் நேற்று திங்கட்கிழமை அபராதத்தை விதித்தார்.

இலங்கை மின்சார சபையின் கொழும்பு அதிகாரிகளும் மட்டக்களப்பு உத்தியோகத்தவர்களும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோதே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux