யாழ்.மாவட்டத்திலுள்ள கத்தோலிக்க யாத்திரைத் தலங்களில் ஒன்றான -வேலணை சாட்டி சிந்தாத்திரை மாதாவின் வருடாந்தத் திருவிழா கடந்த – 08 -09-2016 வியாழக்கிழமை அன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து நவநாட் திருவிழாக்கள் நடைபெற்று 17-09-2016 சனிக்கிழமை காலை 7 மணிக்கு யாழ். மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை தலைமையில் கூட்டுத் திருப்பலியும் அதனைத் தொடர்ந்து சிந்தாத்திரை மாதாவின் திருச்சுரூப பவனியும் இடம் பெற்றது.
அன்னையின் அருளாசி வேண்டி தீவகம் மற்றும் யாழ் குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆலயத்திற்கு வந்திருந்து அன்னையை வழிபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட பெருநாள் விழாவின் நிழற்படங்கள் வீடியோப்பதிவு ஆகியவற்றினை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.
வேலணை சிந்தாத்திரை அன்னையின் வருடாந்த பெருநாள் விழாவின் வீடியோ மற்றும் நிழற்படங்களுக்கான அனுசரணை வழங்கியவர்கள்….
நம்பிக்கை
நாணயம்
உத்தரவாதம்
மலிவு
உபசரிக்கும் தன்மை-இவை அனைத்தையும் உள்ளடக்கிய….
நம்மவரின் வியாபார நிலையம்……..
ஒரே ஒரு முறை சென்று பாருங்கள்……
.