6 மாத பெண் குழந்தையொன்று ஆளை விழுங்கும் மலைப்பாம்புடன் விளையாடி வரும் அதிசய சிதி சித்தார்த் சினுனி (Sidhi Siddharth Sinune) என்ற இக்குழந்தையின் தந்தையான சித்தார்த்
(Siddharth) ஒரு விவசாயி என்பதுடன் பாம்புகளைப் பிடித்து விற்பதை தொழிலாகக் கொண்டுள்ளார். தனது மகளுக்கு விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொடுக்க முடியாததால் பாம்புகளுடன் விளையாட அனுமதித்துள்ளதாக அவர் கூறினார்.சம்பவம் இந்திய மஹாராஷ்டிரா மாநிலத்தில் இடம் பெற்றுள்ளது.
சிதி பாம்புகளுடன் இயல்பாக பழகுவதால் அவை அவருடன் விளையாடுவதை விரும்புகின்றன என சித்தார்த் கூறினார்.சிதி, மலைப்பாம்பொன்றுடன் விளையாடுவதையும் அதன் வாலைக் கடிப்பதையும் படங்களில் காணலாம்