ஒரே நாளில் 54 பேரை 17- கிராமங்களில் புகுந்து கடித்துக் குதறிய ஓநாய்!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை அடுத்த அனந்தபுரம் கிராமத்தில் நேற்று அதிகாலை ஓநாய் ஒன்று திடீரென புகுந்தது. அது ரோட்டில் நடந்து சென்ற சிலரை கடித்து குதறியது. பயந்து போய் மக்கள் வீடுகளுக்குள் சென்று பதுங்கி கொண்டனர். அந்த ஓநாய் வெறியுடன் அடுத்த கிராம
மான புடுமி பள்ளிக்குள் நுழைந்தது.

.
அங்கு காயத்ரி (10) என்ற சிறுமியின் காலை கடித்தது. அதனை பார்த்த அவரது தந்தை ராமச்சந்திரா (32) தடியால் அடிக்க பாய்ந்தார். அவரையும் ஓநாய் கடித்து குதறியது. பின்னர் ரோட்டில் சென்ற பலரை கடித்தது. பலத்த காயத்துடன் பலர் மதப்பள்ளி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
நேற்று ஒரேநாளில் ஓநாய், சித்தூரில் உள்ள 17 கிராமங்களில் புகுந்து 54 பேரை கடித்து குதறியது. இதில் வெள்ள கொண்டாவை சேர்ந்த சுப்புராயப்பா (50), புரனபள்ளியைச் சேர்ந்த பெண் ஜனிரா பீவி (30), காட்டுலபள்ளி திரப்பா (46) ஆகியோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் திருப்பதி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரா ரெட்டி ஓநாயை சுட்டுப்பிடிக்க உத்தர விட்டார். 17 கிராமங்களிலும் வனத்துறையினர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் துப்பாக்கிகளுடன் புகுந்து தேடினர். ஆனாலும் கண்டு பிடிக்க முடியவில்லை. இத னால் கிராமமக்கள் பீதியுடன் காணப்பட்டனர். இந்நிலையில் குக்களப் பள்ளி கிராமத்தில் வைக்கப்பட்ட பொறியில் ஓநாய் சிக்கியது. ஆத்திரத்தில் இருந்த மக்கள் அதனின் கழுத்தை அறுத்து கொன்றனர். அதன் பிறகே கிராமமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux