யாழ்ப்பாணத்தில் சொந்த சகோதரியை மண்ணெண்ணை ஊற்றி (கொடுமையிலும் கொடுமை)

விஜயலட்சுமியின் சகோதரியும், அச்சகோதரியின் மகளும் விஜயலட்சுமியின் உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றிப் பற்ற வைத்தனர். விஜயலட்சுமியின் சகோதரி மண்ணெண்ணெய்யை விஜயலட்சுமியின் உடலில் ஊற்ற, அச்சகோதரியின் மகள் நெருப்பை பற்ற வைத்திருக்கின்றார்.

யாழ்ப்பாணத்தின் தட்டார் தெருவில் வசித்து வந்த 47 வயதுடைய க.விஜயலட்சுமி என்பவரை அவரின் சொந்தச் சகோதரியும், அச்சகோதரியின் மகளும் சொத்துக்களை அபகரிக்கின்றமைக்காகப் படுகொலை செய்ய முயற்சித்திருக்கின்றார்கள்.

ஆயினும் கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற இப்படுகொலை முயற்சியில் இருந்து மயிரிழையில் தப்பிய விஜயலட்சுமி யாழ்.போதனாவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

விஜயலட்சுமியின் சகோதரி காதல் திருமணம் செய்திருந்தார். இதனால் இவர்களின் தகப்பன் கோபம் அடைந்து சொத்துக்கள் முழுவதையும் விஜயலட்சுமியின் பேருக்கு எழுதி வைத்து விட்டார்.
விஜயலட்சுமியின் சகோதரி குடும்ப சமேதராக வன்னியில் இருந்து அண்மையில்தான் யாழ்ப்பாணத்துக்கு திரும்பி வந்திருந்தார் இவர்கள் மீது இரக்கமுற்ற விஜயலட்சுமி வீட்டு மாடியிலேயே இவர்களைத் தங்க வைத்தார். ஆயினும் இக்குடும்பத்தினர் சொத்தில் பங்கு கோரத் தொடங்கினார்கள்.
இதனால் இரு சகோதரிகளுக்கும் இடையில் சொத்துத் தகராறு ஏற்பட்டது. வெளியாட்கள் தலையிடும் வகையில் முற்றியும் விட்டது. இந்நிலையில் விஜயலட்சுமியின் சகோதரியின் கணவர் சம்பவ தினம் விஜயலட்சுமிக்கு படுகொலை அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.
இரவு மின்சாரம் தடைப்பட்டபோது விஜயலட்சுமியின் சகோதரியும், அச்சகோதரியின் மகளும் விஜயலட்சுமியின் உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றிப் பற்ற வைத்தனர். விஜயலட்சுமியின் சகோதரி மண்ணெண்ணெய்யை விஜயலட்சுமியின் உடலில் ஊற்ற, அச்சகோதரியின் மகள் நெருப்பை பற்ற வைத்திருக்கின்றார்.
ஆயினும் சுதாகரித்துக் கொண்ட விஜயலட்சுமியை தீயை ஒருவாறு அணைத்துக்கொண்டு வீதிக்கு ஓடி வந்தார். அருகில் இராணுவம் முகாம் ஒன்று உள்ளது. அங்கு கடமையில் இருந்த படையினரிடம் முறையிட்டார். தீ மூட்டியவர் பாடசாலை மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. இப்படுகொலை முயற்சி தொடர்பாக பொலிஸார் புலனாய்வு விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளார்கள்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux