யாழ்.மாவட்டத்திலுள்ள கத்தோலிக்க யாத்திரைத் தலங்களில் ஒன்றான வேலணை சாட்டி சிந்தாத்திரை மாதா ஆலய வருடாந்தத் திருவிழா கடந்த 08 -09-2016 வியாழக்கிழமை அன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இன்றைய தினம் 16ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு திருச்செபமாலையும் அதனைத்தொடர்ந்து 6 மணிக்கு திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நற்கருணை வழிபாடும் ஆசீர்வாதமும் இடம்பெற்றது.
அல்லையூர் இணையத்தினால் வெள்ளிக்கிழமை மாலை பதிவு செய்யப்பட்ட நற்கருணை விழாவின் நிழற்படத் தொகுப்பினை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.
நாளை சனிக்கிழமை 17 ம் திகதி காலை 7 மணிக்கு யாழ். மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை தலைமையில் இடம்பெறும் கூட்டுத் திருப்பலி மற்றும் சிந்தாத்திரை மாதாவின் திருச்சுரூப பவனி ஆகியவற்றின் முழுமையான வீடியோ பதிவு மற்றும் நிழற்படங்களின் தொகுப்பு ஆகியவற்றினை-நாளை மாலை முதல் அல்லையூர் இணையத்தில் நீங்கள் பார்வையிடலாம்.
நற்கருணை விழா மற்றும் பெருநாள் விழா ஆகியவற்றின் வீடியோ மற்றும் நிழற்படங்களுக்கான அனுசரணை வழங்கியவர்கள்….
நம்பிக்கை
நாணயம்
உத்தரவாதம்
மலிவு
உபசரிக்கும் தன்மை-இவை அனைத்தையும் உள்ளடக்கிய….
நம்மவரின் வியாபார நிலையம்……..
ஒரே ஒரு முறை சென்று பாருங்கள்…….