ஆயிரம் கைதிகளை அடைத்துவைக்கக்கூடிய சிறைச்சாலை யாழில் அமைக்க அங்கீகாரம்!

ஆயிரம் கைதிகளை தங்க வைக்கக் கூடடிய சிறைச்சாலையை யாழ்ப்பாணத் தில் அமைக்க  அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர வின் ஆலோசனையை ஆராய்ந்த அமைச் சரவை அதற்கு அங்கீகாரம் வழங்கியது.

இரண்டரை ஏக்கரில் 272 மில்லியன் ரூபா செலவில் இந்தச் சிறைச்சாலை அமைக்கப்படவுள்ளது.
சிறைச்சாலை புனரமைப்புக் குறித்து அமைச்சர் தெரிவித்தவை வருமாறு:
500 ரூபா முதல் 2000 ரூபா வரை அபராதத் தொகையைச் செலுத்த முடியாத 10 ஆயிரம் பேர் சிறைக்கூடங்களில் இருக் கின்றனர். இவர்களைப் பொது நலப் பணி களில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுப்பதன் மூலம் தற்போது தண்டனை பெற்றுவரும் 27 ஆயிரம் கைதிகளை, ஒரே நாளில் 17 ஆயிரம் ஆகக் குறைக்க முடியும்.
ஒரு கைதிக்கு ஒரு நாளைக்கு ராரி யாக 261 ரூபா செலவாகின்றது. இத் தொகையை ஒரே நாளில் குறைப்பதுடன் பெரும் விரயத்தையும் தவிர்க்க முடியும். 
500 ரூபா அபராதம் செலுத்த வேண்டிய வரை மாதக்கணக்கில் கைதியாக வைத்து பல ஆயிரங்கள் செலவிட வேண்டியிருக்கின்றது. 
அத்துடன் யாழ்ப்பாணம், போகம்பறை, வெலிகடை, காலி, மாத்தறை முதலான சிறைகள் நகரங்களில் இருப்பதனால் இடநெருக்கடி காணப்படுகின்றது. எனவே இவற்றை வேறு இடங்களுக்கு மாற்றவும் உத்தேசிக்கப்பட்டிருக்கின்றது”என்றார்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux