
திருமணத்துக்கு பின் பெங்களூரில் கணவன் வீட்டில் சில நாட்கள் தங்கி இருந்தார். பிறகு மீண்டும் சினிமாவில் நடித்தார். இரு வருக்கும் கருத்து வேறுபாடு என வதந்திகள் பரவின. அதை பொய்யாக்கும் வகையில் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணத்தில் இருவரும் ஜோடியாக பங்கேற்றனர்.
அப்போது மீனாவின் வயிறு பெரிதாக இருந்தது. விசாரித்த போது 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக மீனாவின் தாய் தெரிவித்தார். தற்போது பெங்களூரில் கணவருடன் தங்கியுள்ளார். டாக்டரிடம் தினமும் பரிசோதனை செய்து குழந்தையை சுகமாக பெற்றெடுக்கும் ஆர்வத்தில் உள்ளார்.
ரம்பாவுக்கும் கனடா தொழில் அதிபர் இந்திரனுக்கும் கடந்த பிப்ரவரியில் திருமணம் நடந்தது. ரம்பாவும் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கர்ப்பவதியான ரம்பாவை கணவர் வீட்டார் நன்றாக கவனித்து வருகிறார்களாம்.
