அல்லைப்பிட்டியில் மாடு திருடியவர்களை பொலிஸ்சார் கைது செய்தனர்!

அல்லைப்பிட்டியில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் திருட்டுக்களால்

மக்கள் கவலையடைந்துள்ளனர்.கால்நடைகளைத் திருடி இறைச்சிக்காக
வெளியிடங்களுக்கு விற்பது அதிகரித்து வருகிறது.
நேற்றுமுன்தினம் தரவையில் மேச்சலுக்காய் நின்ற மாடுகளில் ஒன்றைத் திருடிச் சென்று
அதைக்கொன்று இறைச்சிக்காக தயார் படுத்தியபோது மாட்டுச் சொந்தக்காரர்
திருடர்களையும் இறைச்சிக்காய் கொல்லப்பட்ட மாட்டையும் ஆதாரத்துடன்
கண்டுபிடித்துள்ளார். ஊர்காவற்றுறை பொலிசாரிடம் முறையிட்டதைத் தொடர்ந்து திருடர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இத்திருட்டுக்களைத் தடுக்கும்
நோக்கோடு ஏற்கனவே 12பேர் அடங்கிய மக்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply