ஏ 9 வீதியில் தினமும் இடம்பெறும் வாகன விபத்துக்களால்,பெறுமதிமிக்க மனித உயிர்கள் பல இழக்கப்படுகின்றன.வேகக் கட்டுப்பாடின்றி-வாகனத்தைச் செலுத்தும் சாரதிகளினாலேயே -இவ்விபத்துக்கள் இடம்பெறுவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இன்று காலை புதுக்காட்டு சந்திக்கும் இயக்கச்சிக்கும் இடையில் கரந்தாய்குளத்திற்கு அண்மையில் ஏ9வீதியில் நடந்த கோர விபத்தில் 4பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். 7பேர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த ஹயஸ் வாகனம் யாழ்ப்பாணத்திலிருந்து மத்துகம நோக்கி சென்ற பயணிகள் பேருந்துடன் மோதியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளது. ஹயஸ் வாகனம் வழித்தடம் மாறி தவறான பாதையில் வேகமாக சென்று பேருந்துடன் மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்திற்கு ஹயஸ் வாகனம் வேகமாக வந்ததும் வழித்தடம் மாறி வாகனத்தை செலுத்தியதுமே இவ்விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.
கொழும்பில் உறவினரின் மரணச்சடங்கில் கலந்து விட்டு திரும்பிக்கொண்டிருந்த வேளையிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் நெல்லியடியைச்சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 04 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர்.
இந்த விபத்தில் பலியானவர்களில் 78வயதுடைய எஸ்.பசுபதி, 75வயதுடைய ப.பொன்னம்மா, 43வயதுடைய ப.நந்தமூர்த்தி ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாகும்.