நடிகர் வீராச்சாமி மரணம்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் துணைத் தலைவர் பதவி வகித்த பெருமைக்குரியவர் வீராசாமி. முதல் மரியாதை படத்தில் இவர் பேசிய எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி என்ற வசனமும், அந்தப் படத்தில்
இவர் ஏற்று நடித்த பாத்திரமும் இன்றளவும் மக்கள் மனதை விட்டு அகலவில்லை.
ஜெமினி கணேசனின் உன்னைப் போல் ஒருவன் படத்தில் நடித்தவர். அதற்காக தேசிய விருதும் பெற்றவர். எம்.ஜி.ஆருடன் பணம் படைத்தவன் படத்தில் நடித்துள்ளார். கமல்ஹாசனின் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் நடித்திருந்தார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் வீராசாமி நடித்துள்ளார்.
வயோதிகம் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று அவர் ராயப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்தார்.
மறைந்த வீராசாமிக்கு 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இறுதிச் சடங்கு இன்று மாலை கிருஷ்ணாம்பேட்டை மயானத்தில் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
தனது கடைசிக் காலத்தில் போதிய பண வசதி இல்லாமல் மிகவும் நலிவுற்ற நிலையில் இருந்தார் வீராசாமி. சிகிச்சைக்குக் கூட வழியில்லாமல் இருந்து வந்த வீராசாமி பெரும் மன பாரத்துடன் மரணமடைந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux