தீவகம் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைக்காக – இரு தளங்களைக் கொண்ட கட்டிடம் அமைக்கப்பட்டு வருகின்றது. இதில் வெளி நோயாளர் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, ஆய்வு கூடம் x-ray பிரிவு ,நிர்வாக பிரிவு என்பன உள்ளடங்கலாக பல நவீன வசதிகளை கொண்டு இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக் கட்டிடம் சுமார் அறுபது மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகின்றது. கொழும்பைச் சேர்ந்த MJF அறக்கட்டளையின் ( MJF Charitable Foundation ) முழு நிதிப் பங்களிப்புடனும் அவர்களின் நேரடி கண்காணிப்பிலுமே இக்கட்டிடம் அமைக்கப்பட்டு வருவதாக தெரிய வருகின்றது.
MJF அறக்கட்டளையினரால் – ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வறுமைக் கோட்டிற்குட்பட்ட குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குடும்பங்களிற்கு அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பண உதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பயனாளிகள் தெரிவு தற்சமயம் ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்-
தெரிவு செய்யப்படும்- பயனாளிகளுக்கான உதவி புதிய வைத்தியசாலைக் கட்டிட திறப்பு விழாவில் வைத்து வழங்கப்படும் எனவும்- அதன் பின் இக் குடும்பங்களின் முன்னேற்றம் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு.ஆறு மாத காலத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்தி காட்டும் குடும்பங்களிற்கு அவர்களின் வியாபாரத்தை பெருக்குவதற்காக மேலும் நிதியுதவி MJF அறக் கட்டளையினரால் வழங்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
வறுமைக் கோட்டிற்குட்பட்ட குடும்பங்களிற்கு உதவி செய்து அவர்களின் முன்னேற்றத்தை தொடர்ந்து அவதானித்து பொருளாதாரத்தை மேம்படுத்தி காட்டும் குடும்பங்களிற்கு மேலும் உதவிகள் வழங்குவது என்பது MJF இன் சிறப்பான செயற் திட்டமாகும்.
இது அக் குடும்பங்கள் மேலும் ஊக்கமாக முன்னேற வழிவகுக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.









