மின் கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி!

கல்முனையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு இளைஞன் கொல்லப்பட்டதுடன் மூவர் காயமடைந்தனர். 

மாளிகைக்காட்டிலிருந்து கல்முனை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த இளைஞர்கள் வீதி ஓரத்திலிருந்த மின் கம்பத்தில் மோதியதில் ஒருவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார். 


மாளிகைக்காட்டைச் சேர்ந்த ஏ. எம். ஹனீபா நியாஸ் (வயது 18) என்பவரே கொல்லப்பட்டவராவார். காயமடைந்த ஏனைய மூன்று இளைஞர்களும் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நான்கு இளைஞர்களும் ஒரு மோட்டார் சைக்கிளில் பிரயாணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux