யாழ் கோப்பாயைச் சேர்ந்த பெண் கொழும்பு புறக் கோட்டையில் சடலமாக மீட்பு!

கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட பிரிவில் தூக்கிட்டுக் கொண்ட நிலையில் – யாழ் – கோப்பாய் தமிழ் பெண்ணொருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

காலைவேளையில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதாக ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸார் தெரிவித்தனர்.
தொடர்மாடிக் கட்டடம் ஒன்றில் மேற்பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலேயே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux