அல்லையூர் இணையம் “ஆயிரம் தடவைகள் அன்னதானம்” என்னும் பசிபோக்கும் புனிதப் பணியினை சிறப்பாக செயற்படுத்தி வருவது நீங்கள் அறிந்த செய்தியாகும்.
இது வரை உங்கள் பேராதரவுடன் 150 தடவைகளுக்கு மேல் தாயகத்தில் ஆதரவற்றோர் இல்லங்களில் வசிக்கும் மாணவர்கள்-முதியவர்கள்-விழிப்புலன் இழந்தவர்கள் என நூற்றுக்கணக்கானவர்களுக்கு அன்னதானம் வழங்கியுள்ளோம்.
இப்பணியினை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் செயற்படுத்தி வருவதோடு-மேலும் விரைவு படு்த்த எண்ணியுள்ளோம்.
இதன் தொடர்ச்சியாக கடந்த ஆவணி மாதம் பல அறப்பணி நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வுகளில் அல்லையூர் இணையத்தின் இயக்குநர் திரு செல்லையா சிவா அவர்கள் நேரடியாக கலந்து கொண்டார்.மேலும் தாயகத்தில் யுத்த அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு நிர்கதியாக நிற்கும்-எமது உறவுகளின் பசி போக்கிட நீங்கள் முன் வரவேண்டும் என்று பணிவோடு கேட்டுக் கொள்கின்றோம்.
தாயகத்தில்,ஆவணி மாதம் நடைபெற்ற-அறப்பணி நிகழ்வுகளின் சுருக்கும்….
01- அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் திருமதி சின்னத்தம்பி நல்லம்மா அவர்களின் 4ம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு 08.08.2016 அன்று சிறப்புணவு வழங்கப்பட்டது.
02-லண்டனில் வசிக்கும்-மண்டைதீவைச் சேர்ந்த, திருமதி மதனராசா கேமலதா அவர்களினால்,50 ஆயிரம் ரூபாக்கள் பெறுமதியான கறவைமாடு-முல்லைத்தீவைச் சேர்ந்த,கணவனை இழந்த,மூன்று பிள்ளைகளின் தாயான திருமதி பத்மநாதன் காளிப்பிள்ளை அவர்களுக்கு வாழ்வாதார உதவியாக வழங்கி வைக்கப்பட்டது.அத்தோடு அன்றைய தினம் 14.08.2016 இரவு மகாதேவா சிறுவர் இல்ல மாணவர்களுக்கு சிறப்புணவும் வழங்கப்பட்டது.
03-பிரான்ஸில் காலமான-மண்கும்பானைச் சேர்ந்த, அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி அவர்களின் 8ம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு-15.08.2016 அன்று மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் பிரார்த்தனையுடன்-சிறப்புணவு வழங்கிய நிகழ்வு இடம் பெற்றது.
04-புங்குடுதீவு-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, அமரர்கள் திரு, திருமதி கதிர்காமு-நல்லம்மா அவர்களின் நினைவு தினத்தினை முன்னிட்டு 17.08.2016 அன்று மகாதேவா சுவாமிகள் இல்லத்து மாணவர்களுக்கு மதிய சிறப்புணவு வழங்கப்பட்டது.
05-கிளிநொச்சி ஜெயந்தி நகரில் அமைந்துள்ள மகாதேவா சிறுவர் இல்ல மாணவிகள் மூவருக்கு 19.08.2016 அன்று நடத்தப்பட்ட பூப்புனித நீராட்டு விழாவின் போது -மதிய சிறப்புணவிற்கான 40 ஆயிரம் ரூபாக்களை அல்லையூர் இணையத்தின் இயக்குநர் திரு செல்லையா சிவா வழங்கினார்.
06-யாழ் தீவகம் கரம்பனைச் சேர்ந்த, அமரர் குணரத்தினம் அவர்களின் நினைவு தினத்தினை முன்னிட்டு 20.08.2016 அன்று யாழ் கைதடியில் அமைந்துள்ள விழிப்புலன் இழந்தவர்கள் வசிக்கும் தொழிற்பூங்கா இல்லத்தைச் சேர்ந்தவர்களுக்கு சிறப்புணவு வழங்கப்பட்டது.
07-ஜெர்மனியில் வசிக்கும்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு சுந்தரம்பிள்ளை தனேந்திரன் அவர்களின் 37வது பிறந்த நாளினை முன்னிட்டு-28.08.2016 அன்று யாழ் கொழும்புத்துறையில் அமைந்துள்ள-சென் ஜோசப் முதியோர் இல்லத்தைச் சேர்ந்தவர்களுக்கு சிறப்புணவு வழங்கப்பட்டதுடன்-மேலும் யாழ் கைதடியில் அமைந்துள்ள விழிப்புலன் இழந்தவர்களின் இல்லத்திற்கு 32 ஆயிரம் ரூபாக்கள் பெறுமதியில்- 2000 லீற்றர் கொள்ளக்கூடிய தண்ணீர் ராங் ஒன்றும்-அயன் மேசை ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டன.
எமது இணையத்தின் மீது நம்பிக்கை வைத்து -லட்சக்கணக்கான ரூபாக்களை அறப்பணிக்கு வழங்கிய நல் இதயங்கள் அனைவருக்கும்-எமது அறப்பணிக் குடும்பத்தினரின் நன்றியினைக் காணிக்கையாக்குகின்றோம்.