பாட்டியின் நாய் கடித்துப் பேரனின் உயிர் ஊசலாட்டம்!

தனது பாட்டி வளர்த்த நாய் கடித்ததில் இரண்டு வயதாக குழந்தையொன்று பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளது. லண்டன் கிளைசெஸ்ரருக்கு அண்மையிலுள்ள புரொக்வெர்த்திலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. இக்குழந்தைக்கு அவசர சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டபோதிலும், தொடர்ந்தும் குழந்தையின் நிலமை மிகவும் மோசமாகவே உள்ளது.
தனது பாட்டி வீட்டுக்குச் சென்ற இக்குழந்தை, குறித்த நாய் துள்ளி தனது முகத்தை முகத்தைத் தொட முயன்றபோது அந்நாயைத் தள்ளிவிட்டுள்ளது. ஆனால் உடனும் குழந்தையை நிலத்துடன் சேர்த்து இழுத்த நாய் சரமாரியாகக் கடித்துள்ளது.

குழந்தையின் தந்தையும் உறவினர்களும் நாய்க்கு அடித்து குழந்தையை விடுவித்து, மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தையின் முகத்தில் இருந்த காயங்களுக்காக இரு சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று காலை மூன்றாவது சத்திரசிகிச்சை நடந்துள்ளது. எனினும் குழந்தை ஆபத்தான நிலையில் இருப்பதாகவே தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply