மிகின் லங்கா கிளை யாழில்!

மிகின் லங்கா விமான சேவை நிறுவனத்தின் கிளைக் காரியாலயமொன்று இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமையப்பெற்றுள்ள
இந்தக் காரியாலயத்தை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி அவர்களும் இணைந்து நாடாவை வெட்டி திறந்து வைத்தனர்.

 

அங்கு உரையாற்றிய மிகின் லங்கா பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன கொழும்புக்கு வெளியே இரண்டாவது கிளைக் காரியாலயம் யாழ்ப்பாணத்தில் இன்று திறந்து வைக்கப்படுவதாகவும் யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய சர்வதேச நாடுகளுக்கும் இதன் பணிகளை விஸ்தரிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். 

அத்துடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சிந்தனைக்கு அமைவாக இன மத வேறுபாடுகளின்றி எல்லா மக்களும் மதிக்கப்பட வேண்டுமென்பதுடன் ஏனைய விமான சேவைகளை விடவும் குறைந்த செலவில் இதில் பயணம் செய்ய முடியுமென்றும் தெரிவித்தார். 

இந்நிகழ்வில் இந்து கிறிஸ்தவ இஸ்லாம் பௌத்த மதத் தலைவர்களினதும் பூசை வழிபாடுகளும் இடம்பெற்றன. 

Leave a Reply