தீவகம் மண்கும்பான் மேற்கில் அமைந்துள்ள புளியடி அருள்மிகு ஞானவைரவர் கோவிலில் 108 சங்காபிஷேக விழா 09.09.2016 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது.
லண்டனில் வசிக்கும்-ஞானவைரவர் கோவில் உபயகாரர்களான-திரு திருநாவுக்கரசு சந்திரன் மற்றும் திரு கனகலிங்கம் தயாபரன் ஆகியோர்களினால்-கோவில் புனரமைக்கப்பட்டு-108 சங்காபிஷேக விழா நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உபயகாரர்களின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால், பதிவு செய்யப்பட்ட-சங்காபிஷேக விழாவின் முழுமையான நிழற்படத் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.
திரு கனகலிங்கம் தயாபரன் குடும்பத்தினரின் நிதி அனுசரணையில்-பிரதி வெள்ளிக்கிழமை தோறும்-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் அன்னதானம் வழங்கப்பட்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.