அல்லைப்பிட்டி இளம் மருத்துவர் திரு மன்மதராசன் சசிகுமார் உங்கள் வாழ்த்துக்களை பதிவு செய்யுங்கள் |
ஒன்பது சகோதரங்களில் ஒருவராகப் பிறந்து
உறுதியோடு கல்வியைக்கற்றுவிரைவில்ஒருமருத்துவராக வெளியேறப் போகும் 28 வயதுநம்மூர் இளைஞனின் கதை!
எம்மூரில் தோன்றியுள்ள இளம் மருத்துவரை,தெரிந்துகொள்ள அல்லையூர்
இணையம் அவரோடு தொடர்பினை ஏற்படுத்தியது.
நாம் தொடர்பு கொண்ட
போது .யாழ் போதனா வைத்தியசாலையில் பயிற்சி நெறியில் இருந்த அவர்
பயிற்சி முடிந்ததும் எம்மோடு தொடர்பினை ஏற்படுத்தினார்.நாம் எம்மை
அறிமுகப்படுத்திக் கொண்டபோது,மிகவும் மகிழ்ச்சியடைந்த அவர் எம்மோடு
கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
இனி அல்லைப்பிட்டி கிராமத்தில் உருவாகியுள்ள இளம் மருத்துவர் கூறுவதைக்கேளுங்கள்.நான் அல்லைப்பிட்டி கிராமத்தில் 29/09/1983 அன்று திரு இளையதம்பி மன்மதராசன்-பரமேஸ்வரி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தேன்.என்னோடுகூடப்பிறந்தவர்கள் எட்டுச்சகோதரங்கள்!நான் ஆரம்ப கல்வியை அல்லைபராசக்தி வித்தியாசாலையிலும், உயர்கல்வியை வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திலும்,தொடர்ந்து மருத்துவப்படிப்பை,யாழ் பல்கலைக் கழகத்திலும்,தற்போது பயற்சிநெறியின் படிப்பை யாழ் போதனா வைத்தியசாலையிலும்,மேற்கொண்டு வருகிறேன்.மேலும் எட்டு மாதங்கள் பயிற்சி நெறிமுடிந்தவுடன்,மருத்துவர் வேலையில் சேரமுடியும். என்றும்,கூறினார்.
அல்லைப்பிட்டி மக்களுக்கு வைத்தியம் பார்ப்பீர்களா?என்ற எமது கேள்விக்கு
தாம் பிறந்த கிராமத்திற்கு சேவைசெய்வதே! தமது குறிக்கோள் என்றும்
கூறினார்.
ஒன்பது சகோதரங்களுடன் பிறந்து வறுமையிலும் உறுதிதளராது கல்வியைக் கற்று 28 வயதில் மருத்துவராக வெளியேறும் அவரை அல்லைப்பிட்டி மக்கள்
சார்பிலும் அல்லையூர் இணையம் சார்பிலும் வாழ்த்தி நிக்கின்றோம்.