வாடகைத்தாய் மூலம் பிறக்கவிருந்த பின்லாடன் வாரிசை நிர்மூலமாக்கினர்

லண்டன் : சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லாடனின் மகன் மூலம் உருவான இரட்டை குழந்தைகள் இறந்து விட்டன. அல்-குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லாடன். இவருக்கு ஏராளமான மனைவிகள் உள்ளனர்.

இவர்கள் மூலம், ஏராளமான குழந்தைகளும் உள்ளனர். இதில் ஒரு மகன் ஓமர்(29). வாட்டசாட்டமான அழகிய இளைஞரான இவருக்கும், பிரிட்டனைச் சேர்ந்த செய்னா(54) என்ற பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது. செய்னா பேரன் பேத்திகளை கண்டவர். செய்னாவுக்கு வயதாகி விட்டதால், அவரால் குழந்தை பெற முடியாத நிலை 
ஏற்பட்டது.
எனவே, பிரிட்டனில் உள்ள பிரிஸ்டால் நகரைச் சேர்ந்த நடன பெண் லூயிஸ் பொலார்டு (24) என்பவரை வாடகை தாயாக அமர்த்தி, குழந்தை பெற முடிவு செய்தனர். இரட்டை குழந்தைகளை கருத்தரித்தார் லூயிஸ். ஆனால், அதற்குள் ஓமரும், செய்னாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.
இந்நிலையில், சிரியாவில் உள்ள ஒரு ஓட்டலுக்கு செல்லும் போது லூயிசை இரண்டு பேர் துரத்தி சென்று கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் லூயிஸ் படுகாயமடைந்துள்ளார். தாக்குதலின் காரணமாக லூயிஸ் கருப்பையில் இருந்த 10 வாரங்களான நிலையில் இருந்த இரண்டு சிசுக்களும் இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
“ஒசாமாவின் பேரன்களை நான் சுமப்பதை தெரிந்து கொண்டு என் மீது தாக்குதல் நடந்துள்ளது’ என, லூயிஸ் தெரிவித்துள்ளார். இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்திருந்தால் லூயிசுக்கு எட்டு லட்ச ரூபாய் கொடுப்பதாக ஓமர் ஒப்பந்தம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux