மஹிந்த வந்து சந்திக்காவிட்டால் தற்கொலை செய்வேன்”

ஹோர்டன் பிளேஸிலுள்ள 40 அடி உயரமான ஒரு கோபுரத்தில் ஏறியுள்ள அடையாளங் காணப்படாத நபர் ஒருவர் தம்மை ஜனாதிபதி மஹிந்த வந்து சந்திக்காவிட்டால் தாம் தற்கொலை செய்வேன் என மிரட்டுகிறார்.
எனினும் தற்போது மஹிந்த நேரில் வராவிட்டாலும் தம்மைத் தொலைபேசியில் அழைத்து தனிப்பட்ட ரீதியில் தம்முடன் கதைக்கவேண்டும் என்று கூறி தனது கைத்தொலைபேசி இலக்கத்தையும் அந்நபர் கொடுத்துள்ளார்.

இந்நபரின் இந்த போராட்டத்தால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இவரை அக்கோபுரத்திலிருந்து இறங்கும்படி அங்கு கூடியுள்ள போலீசும், தீயணைப்புப் படையினரும் கோரிக்கை வைத்திருக்கின்றனர். ஆனால் தம்மை இறக்க முற்பட்டால் தாம் மேலிருந்து பாய்ந்து சாவேன் என அல்லது நஞ்சருந்துவேன் என அவர் மிரட்டுகிறார். ஆகவே என்ன செய்வது எனத் தெரியாத குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply