நாவற்குழியில் மரத்தில் தொங்கிய யுவதியின் சடலம்

         சாவகச்சேரி, செப்.14
நாவற்குழி தச்சன் தோப்புப் பகுதியில்  மரம் ஒன்றில் கயிற்றில் தொங்கிய நிலை யில் யுவதியின் சடலம் காணப்பட்டது.
இவரது சடலத்தை சாவகச்சேரி பொலி ஸார் மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்திய சாலை பிரேத அறையில் ஒப்படைத்துள்ளனர்.
இதே இடத்தைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை தனுஷா (வயது 19) என்னும் யுவதியே இறந்தவராவார். இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் நீதி மன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.             

Leave a Reply