யாழ் – மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் வேதியர்கள் புடைசூழ வேதாகமங்கள் ஒலிக்க மங்கள வாத்தியங்கள் முழங்க பக்த கோடிகளின் அரோகரா கோசத்துடன் திருவெண்காடு சித்திவிநாயகப்பெருமானுக்கு கடந்த 04.09 .2016 (ஞாயிற்றுக்கிழமை)அன்று மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்திவிழா சிறப்பான முறையில் இடம்பெற்றது.
கண்டியிலிருந்து மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் ஆலயத்திற்கு,அழைத்து வரப்பட்ட-தும்பிக்கையோனால்,பஞ்சதள இராஜகோபுரத்தின் திருக் கதவு திறக்கப்பட்ட நிகழ்வானது-சித்தி விநாயகப் பெருமானின் பக்தர்களை பெரும் ஆனந்தத்தில் ஆழ்த்தியது.
ஆலய தர்மகத்தா திரு இரட்ணசபாபதி யோகநாதன் அவர்களின் வேண்டுகோளின் பேரில்- அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில் புதிய தொழில் நுட்பத்தில்,பதிவுசெய்யப்பட்ட- மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழாவின்-வீடியோ மற்றும் நிழற்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.