பதுளை – பசறை வீதியின் பஸ் தரிப்பு நிலையமொன்றில் கைவிடப்பட்ட ஆண் குழந்தையொன்றை மீட்டதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
புடவைத் துண்டொன்றின் மூலம் சுற்றிய நிலையிலிருந்த இந்த குழந்தைக்கு சுமார் ஒன்றரை மாத வயதிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
பசறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றை அடுத்தே இந்த குழந்தை மீட்கப்பட்டதாகவும் அந்தக் குழந்தையை மாவட்ட வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைக்காக அனிமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.