நடுக்கடலில் இறக்கி விடப்பட்ட அகதிகள்!

தமிழ்நாட்டில் இருந்து திரும்பிய 13 தமிழ்அகதிகள் மீட்பு புகைப்படங்கள்

இணைக்கப்பட்டுள்ளன!
தமிழ்நாட்டில் அடைக்கலம் தேடியிருந்த 13 ஈழத்தமிழர்கள் கடல்வழியாக தாயகம் திரும்பிய போது மணல்திட்டில் இறக்கி விடப்பட்ட நிலையில் சிறிலங்கா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த 11ம் திகதி இந்திய கடல் எல்லைக்கு அண்மையில் ஏழாவது மணல்திட்டில் இருந்து 13 தமிழர்களையும் சிறிலங்கா கடற்படையினர் மீட்டு தலைமன்னாருக்கு அழைத்து வந்தனர். சிறிலங்கா கடற்படையின் சிறப்பு படகு அணியைச் சேர்ந்த படையினரே இவர்களை தமது படகுகளில் ஏற்றி வந்து தலைமன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட 13 பேரில் ஏழு ஆண்களும் மூன்று பெண்களும் மூன்று குழந்தைகளும் அடங்கியிருந்தனர். இந்திய மீன்பிடிப் படகு ஒன்றின் மூலம் தாயகம் திரும்ப முற்பட்ட இவர்கள் ஏழாவது மணல்திட்டில் இறக்கி விடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது போர் நடைபெற்ற காலத்தில் இந்தியாவுக்கு அகதிகளாகச் சென்றதாகவும் தற்போது போர் முடிந்து விட்டதால் நாடு திரும்பியதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux