அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்திற்கான புதிய கட்டிடத் திறப்பு விழா-05.09.2016 திங்கட்கிழமை அன்று காலை 10 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.
அதிபர் என்.பத்மநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,வட மாகாண சபையின் கல்வி அமைச்சர் திரு குருகுலராஜா மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவஞானம் சிறிதரன் மற்றும் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு-ஓய்வுநிலை அதிபர் திரு வாமதேவன்-அல்லைப்பிட்டி பங்குத் தந்தை உட்பட மேலும் பலர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்திற்கான புதிய கட்டிடத்தினை-வட மாகாண சபையின் கல்வி அமைச்சர் திரு குருகுலராஜா அவர்கள் நாடா வெட்டித் திறந்து வைத்ததாகவும்-கணனி வகுப்புக்கான புதிய கட்டிடத்தினை- தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவஞானம் சிறிதரன் அவர்கள் நாடா வெட்டித் திறந்து வைத்ததாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடியோப் பதிவு மற்றும் நிழற்படப்பதிவு ஆகியவற்றிக்கான நிதி அனுசரணையினை-அல்லையூர் இணையம் வழங்கியுள்ளது.