பேருவளையில் துப்பாக்கிச் சூடு பட்டு சிறுவன் இறப்பு! ஒன்பது சந்தேகநபர்கள் கைது

 
களுத்துறை மாவட்டத்தின் பேருவளைப் பிரதேசத்தில் பொலிஸாருக்கும், கொள்ளைக்காரர்களுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற மோதலில் 07 வயதுச் சிறுவன் துப்பாக்கிச் சூடு பட்டு இறந்தமை தொடர்பாக சந்தேகநபர்கள் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்களில் ஐவர் பொலிஸாரும், ஏனையோர் பொதுமக்களும் ஆவர். இருப்பினும் கொள்ளைக்காரர்கள் தப்பி ஓடி விட்டார்கள். பொலிஸ் பேச்சாளர் பிரிசாந்த ஜெயகொடி இத்தகவலை வழங்கினார்.
மோதல் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது சிறுவன் அவரது தகப்பனுடன் ஓட்டோ ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போதே துப்பாக்கிச் சூடு பட்டதில் சிறுவன் இறந்து விட்டார்.

Leave a Reply