மட்டு -பாரியவெடி விபத்து படங்கள் இணைக்கப்பட்டுள்ளன!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் நிலையத்துக்கு அருகில் பாரிய வெடிகுண்டு விபத்து ஒன்று இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி வேலைகளின்போது பாறைகளை உடைக்கின்றமைக்கு வெடிபொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கொள்கலன் ஒன்று இவ்வாறான ஒரு தொகை வெடிபொருட்களுடன் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோதே இவ்வனர்த்தம் நேர்ந்துள்ளது.

இக்குண்டு வெடிப்பில் பொலிஸார் மற்றும் சீனப் பிரஜைகள் இருவர் உட்பட குறைந்தது 60 பேர் வரை உயிர் இழந்துள்ளார்கள். 45 பேர் வரை காயம் அடைந்துள்ளார்கள். காயப்பட்டவர்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

Leave a Reply