யாழ்ப்பாணத்தில் புதிய கட்சியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணத்தில் புதிய அரசியல் கட்சியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தலின் போது மேயர் பதவிக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட எஸ்.சத்தியேந்திராவே இவ்வாறு கட்சி ஆரம்பித்துள்ளார்.

 
ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் ஒருவரும், சத்தியேந்திராவும் இணைந்து புதிய கட்சியை ஆரம்பித்துள்ளனர்.
 
ஜனநாயக மக்கள் கட்சி என்ற பெயரில் இந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 
புதிய கட்சியின் பதிவு நடவடிக்கைகள் விரைவில் நடைபெறும் எனவும், பதிவிற்கான விண்ணங்கள் விரைவில் தேர்தல் ஆணையாளரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply