தீவகம் மண்கும்பானில் அமைந்துள்ள முருகன் கோவிலில்-மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வந்த-மணிமண்டபம் 29.08.2016 திங்கட்கிழமை அன்று திறந்து வைக்கப்பட்டது.
பிரான்ஸில் வசிக்கும்-மண்கும்பானைச் சேர்ந்த, திரு பேரம்பலம் சின்னத்தம்பி அவர்களினால்,தனது அன்பு மனைவி அமரர் சின்னத்தம்பி லீலாவதி அவர்களின் ஞாபகார்த்தமாகவே-இம்மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
பல லட்சம் ரூபாக்கள் செலவில் அமைக்கப்பட்ட-மணிமண்டபத்தின் திறப்பு விழாவில்- பிரான்ஸிலிருந்து வருகை தந்த-திரு சின்னத்தம்பி அவர்களின் புதல்வி குடும்பத்தினர் மற்றும் லண்டனிலிருந்து வருகை தந்த-திரு சின்னத்தம்பி அவர்களின் மைத்துனர் குடும்பத்தினர் உட்பட-உறவினர்கள்-ஊர்மக்கள் எனப் பெருந்தொகையானோர் கலந்து கொண்டனர்.