அமெரிக்கா மண்டைதீவில் ஹோட்டல் அமைக்கிறது(அதிசயம் ஆனால் உண்மை)

அமெரிக்க நிறுவனம் ஒன்று மண்டைதீவில் ஹோட்டல் அமைப்பதற்கான முதலீட்டு முயற்சி களில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.யாழ்ப்பாணத்து அதிகாரிகளுக்கும் அரசி யல் வாதிகளுக்கும் கண்ணில் படாமல்போன மண்டைதீவை அமெரிக்கா கண்டறிந்தமை மன நிறைவைத் தருவதாகும். மண்டைதீவின் அபிவிருத்தி மற்றும் அங்கு ஏற்படுத்தக்கூடிய பறவைகள் சரணாலயம், இறால் வளர்ப்புத் திட்டம் பற்றி எல்லாம் இவ் விடத்தில் பல தடவைகள் எழுதியிருந்தோம்.


ஆனால் எங்கள் அதிகாரிகளோ! அல்லது அரசியல்வாதிகளோ எவரும் அதுபற்றி அலட்டிக் கொள்ளவேயில்லை அறிவில்லார்க்குரைப்பவர் அவரிலும் பேதை என்ற தமிழ்ப் பழமொழியின் தத்துவம் உணர்ந்து நாமும் மெளனமாக இருந்தோம். ஆனால் அமெரிக்க நிறுவனம் ஒன்று ஹோட் டல் கட்டுவதற்கு மண்டைதீவை தெரிவு செய்த தென்பதை அறிந்தபோது நாம் இவ்விடத்தில் எழுதியது பொய்யல்ல என்பது நிரூபணமாகி யுள்ளது. அந்தளவில் மன ஆறுதல் அடையலாம்.

அதேநேரம் மண்டைதீவில் அமெரிக்க ஹோட் டல் அமைப்பது தொடர்பில் ஏற்படக்கூடிய சாதக, பாதக காரணிகள் பற்றி ஆராய்வது கட்டாய மானதாகும்.அமெரிக்கா என்பதற்காக அதனைக் கை தட்டி வரவேற்க வேண்டும் என்ற தேவை எதுவும் கிடையாது. மண்டைதீவில் அமெரிக்க நிறுவனம் ஹோட் டல் கட்டுவதில் மண்டைதீவு மக்களின் அபிப்பி ராயத்தை பெற்றுக் கொள்வது அவசியமானதே.

அத்தகையதோர் அபிப்பிராயத்தை பெற்றுக் கொள்ளும் போது, அமெரிக்க ஹோட்டல் மண் டைதீவில் அமைக்கப்படுவதனால் மண்டை தீவில் ஏற்படக்கூடிய அபிவிருத்திப் பணிகள், கீழ்க் கட்டுமானங்கள், குடிநீர் வசதிகள் மற்றும் மின் வசதிகள், வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் தெளிவான விளக்கங்கள் அவசியம்.

மண்டைதீவு மக்கள் மீளக் குடியமர்ந்து இவ்வளவு வருடங்கள் ஆகியும் யுத்தத்தால் அழிந்துபோன வைத்தியசாலையை புனர மைக்க எந்தவித நடவடிக்கையையும் எடுக் காதவர்கள், உடைந்துபோன கடல் அணையை மீளக் கட்டி வயல் நிலங்கள் உவரடைவதைத் தடுக்க முடியாதவர்கள் இருக்கும் போது, எழுந்தமானமாக அமெரிக்க ஹோட்டலை மண்டைதீவில் கட்டுவதால் ஏற்படக்கூடிய சாதக, பாதக விளைவுகளை மண்டைதீவு மக்களே ஆராய்ந்து ஆவன செய்யவேண்டும். இது அவர்களின் தலையாய கடமை.

Leave a Reply