அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, திரு க.யோகராசா அவர்களின் புதல்வியின் திருமண விழாவின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டி பொதுமகன் திரு க.யோகராசா அவர்களின் புதல்வியின் திருமணவிழா-கடந்த வாரம் வேலணை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்திருமண நிகழ்வில்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு-மற்றும் அல்லைப்பிட்டி கிராமசேவையாளர் திரு சின்னத்துரை இரட்ணேஸ்வரன் மற்றும் கமக்காரர் அமைப்பின் தலைவர் திரு சோ.மகேஸ்வரநாதன் மற்றும்அதிகளவான பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர் என்று எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.
அல்லையூர் இணையத்தின் சார்பில் 25 ஆயிரம் ரூபாக்கள் வழங்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு யோகராசா அவர்களின் இரண்டு பெண் பிள்ளைகள் யுத்த அனர்த்தங்களுக்குள் சிக்குண்டு அகால மரணமாகியிருந்தனர்-என்பதனால் தான் அவரின் வேண்டுகோளை ஏற்று அல்லையூர் இணையம் 25ஆயிரம் ரூபாக்களை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்களில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்

Leave a Reply