தீவகத்தில் புகழ்பெற்ற மண்டைதீவு கண்ணகைஅம்மனின்பொங்கல்தீமிதிப்பு, வழி வெட்டல் ஆகியவற்றின் முழுமையான வீடியோப்பதிவு!

மண்டைதீவில் அமைந்துள்ள காவல் தெய்வமாகிய கண்ணகை அம்மனின் வருடாந்த பொங்கல் விழா-24-06-2013 திங்கட்கிழமை அன்று வெகு சிறப்பாக  இம்முறை நடைபெற்றது.
முதல் முறையாக உலகமெல்லாம் பரந்துவாழும் எங்கள் கிராமத்து மக்கள் கண்ணகை அம்மனின் திருவிழாவைப்பார்த்து மகிழ்ந்திட வேண்டி-அல்லையூர் இணையம் எடுத்துக் கொண்ட பெரும் முயற்சியின் பலனாக இந்த வீடியோப்பதிவு உங்கள் முன் சமர்ப்பிக்கப்படுகின்றது.ஊரில் நின்று கண்ணகை அம்மன் திருவிழாவில் நீங்களும் கலந்துகொண்ட மனத்திருப்தி இந்த வீடியோவை நீங்கள் பார்வையிட்ட பின் நிட்சயம் உங்களுக்கு ஏற்படும்.

வீடியோவைப் பார்ப்பதற்கு முன்…..

கடும்காற்று
கும்மென்ற இருட்டு
போதிய மினசார வசதியின்மை

அகியவற்றிக்கு மத்தியிலும் விடியவிடிய விழித்திருந்து அம்மனின் திருவிழாவினை பதிவு செய்த எமது வீடியோப்படப்பிடிப்பாளர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்-இவர்கள் நயினை நாகபூசணி அம்மனின் தேர் தீர்த்த திருவிழாக்களை இணையத்தின் ஊடாக நேரடி அஞ்சல் செய்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அனுசரணை

இந்த வீடியோப்பதிவினை வெளியிடுவதற்கான அனுசரணையினை-கண்ணகை அம்மன் ஆலய முன்னாள் தர்மகத்தாவும்-அண்மையில் இறைவனடி சேர்ந்தவருமாகிய,அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் (சின்னத்துரை) அவர்களின் ஞாபகார்த்தமாக அவரது புதல்வர்கள் வழங்கியுள்ளனர்-அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-கண்ணகி அம்மனை வேண்டுவோமாக!


Leave a Reply