அல்லையூர் இணையத்தின் அனுசரணையில் நடைபெற்று வரும்-ஆனிமாதற்திற்கான அறப்பணிகள் பற்றிய விபரங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையம் எங்கள் கிராமங்களின் செய்திகளை வெளியிடுவதுடன் தொடர்ந்து தன்னால் முடிந்த அறப்பணிகளையும் செய்து வருவது நீங்கள் அறிந்ததே- அந்த வகையில் ஆனிமாதத்தில் அல்லையூர் இணையத்தின் அனுசரணையில் எங்கள் நாட்டில் நாம் செய்த,தொடர்ந்து செய்யப்போகின்ற விபரங்களை உங்கள் முன் பதிவு செய்கின்றோம்.

ஏன் பதிவு செய்கின்றோம்
எங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள இதை நாம் பதியவில்லை-நீங்களும் உங்களால் முடிந்த அறப்பணிகளை ஆற்ற முன்வரவேண்டும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் தான் இவற்றை உங்கள் பார்வைக்கு பதிந்து செய்துள்ளோம்.
ஆனிமாதம் நடைபெற்ற-நடைபெறப் போகின்ற அறப்பணிகளின் விபரங்கள்
01-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,செல்லையா சிவா அவர்களின்-(02-07-2013) பிறந்த நாளை முன்னிட்டு- கைதடி மாற்றுதிறனாளிகள் தொழிற்பூங்காவில் நடைபெற்ற நிகழ்வு!

02-மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி வைத்திலிங்கம் சின்னம்மா(பாக்கியம்)அவர்களின் 31ம் நாளை முன்னிட்டு(08-07-2013)அன்று கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரமத்தில் நடைபெற்ற நிகழ்வு!

03-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர்கள் திரு-திருமதி இரத்தினசபாபதி சிவயோகலட்சுமி தம்பதிகளின் நினைவாக-அல்லைப்பிட்டி கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாளில் நடைபெறவுள்ள நிகழ்வு!

04-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் சிறிகாந்தன் ரஜனிகாந் (குமரன்)அவர்களின் நினைவுதினத்தை முன்னிட்டு-யாழ் தின்னவேலியில் அமைந்துள்ள-ஆதரவற்றோர் நிழல்கள் காப்பகத்தில் நடைபெறவுள்ள நிகழ்வு-ஆகியனவே இந்தமாதம் எமது அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்பதனை உங்களுக்கு அறியத்தருகின்றோம்.

தானத்தில் சிறந்தது அன்னதானமே ஆகும்-எனவேதான் நாம் இப்பணியினை 3 வருடங்களாக தொடர்ந்து செய்து வருகின்றோம்.

படங்களில் அழுத்திப் பார்வையிடுங்கள்!

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux