யாழ் தீவகத்தில்,சிறந்த விளையாட்டு வீரர்களைக் கொண்ட-வலிமையான விளையாட்டுக் கழகமாக-அல்லைப்பிட்டி சென் பிலிப்ஸ் விளையாட்டுக் கழகம் வளர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 17ம் திகதி-புளியங்கூடல் மகாமாரி விளையாட்டுக்கழகம் -மகாமாரிவெற்றிக்கிண்ணத்திற்கான, தீவக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட-சிறந்த 18 அணிகளுடனான மென் பந்து துடுப்பாட்டத் தொடர் ஒன்றினை நடத்தியது.
இப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டு-மீண்டும் 24 ம் திகதி நடைபெற்றது.
இவ்வாட்டத்தின் இறுதிப் போட்டியில் ஊர்காவற்றுறை கரம்பன் கீரோஸ்ராருடன் கடுமையாக மோதிய அல்லைப்பிட்டி சென்பிலிப்ஸ் விளையாட்டுக்கழகம் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டதுடன்-மேலும் இத்தொடரின் சிறந்த பந்து வீச்சாளராகவும்- தொடராட்ட நாயகனாகவும்-போட்டி ஆட்ட நாயகனாகவும்- சென். பிலிப்ஸ் விளையாட்டுக் கழகத்தின் வீரர் தெ.சத்தியராஜ் தெரிவு செய்யப்பட்டு பரிசளிக்கப்பட்டார்.
தீவகத்தில் உதைபந்தாட்டம்-மென்பந்தாட்டம் உட்பட அனைத்து விளையாட்டுக்களையும் விளையாடக்கூடிய சிறந்த வீரர்களைக் கொண்ட-விளையாட்டுக் கழகமாக-அல்லைப்பிட்டி சென் .பிலிப்ஸ் விளையாட்டுக் கழகம் வளர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.