அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த,திரு எம்.நாதன் அவர்களின் 70 வது பிறந்த நாளை,முன்னிட்டு 27.07.2016 அன்று-அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில் யாழ் கைதடியில் அமைந்துள்ள விழிப்புலன் இழந்தவர்கள் வசிக்கும் தொழிற்பூங்கா இல்லத்தைச் சேர்ந்தவர்களுக்கு- அன்றைய தினம் மதிய சிறப்புணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் திரு நாதன் அவர்கள் தனது மனைவி மகன் ஜெகன் அவர்களுடன் கலந்து கொண்டார்.
திரு எம். நாதன் அவர்களுக்கு,அல்லையூர் இணையம் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.
திரு எம்.நாதன் அவர்கள் -அல்லைப்பிட்டி மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் “அண்ணன் ஒரு கோவில்” என்ற திரைப்படத்தினை காண்பித்து மகிழ்ச்சிப்படுத்திய பெருமைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மழலைகள் பாடசாலை கட்டிட நிதிக்காக-அன்று தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட-இத்திரைப்படமே அல்லைப்பிட்டி மக்கள் முதன்முதலில் தொலைக்காட்சியில் பார்த்து மகிழ்ந்த தமிழ்த் திரைப்படமாகும்-என்பதனை நன்றியோடு அறியத்தருகின்றோம்.
,