தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவஞானம் சிறிதரன் அவர்கள்-28.07.2016 வியாழக்கிழமை அன்று தீவகத்தில் நயினாதீவு மற்றும் வேலணை பகுதிகளுக்கு விஜயம் செய்து பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடல்களை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலணை பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில், திரு சிறிதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற-கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலில், பிரதேச செயலர் மற்றும் கிராமசேவையாளர்கள், திணைக்கள அதிகாரிகள்,கிராம மட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டதாகவும்-அதனைத் தொடர்ந்து வேலணை பொது மருத்துவ மனைக்குச் சென்ற,திரு சிறிதரன் அவர்கள்- மருத்துவர் தனேஸ்குமார் அவர்களிடம்-மருத்துவ மனையின் தற்போதைய நிலை பற்றி கேட்டறிந்ததுடன் -மேலும் புதிதாக அமைக்கப்பட்டு வரும் வெளிநோயாளர் பிரிவைப் பார்வையிட்டதுடன்-தன்னாலான உதவியினை மருத்துவ மனைக்கு செய்வதாக உறுதியளித்ததாகவும் தெரிய வருகின்றது.
அத்தோடு அருகில் அமைந்துள்ள வேலணை பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கும் வருகை தந்து-அண்மையில் தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட-மூன்று பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடிச் சென்றதாக மேலும் தெரிய வருகின்றது.