யாழ் தீவகம் வேலணை வங்களாவடி முருகனின் வருடாந்த மகோற்சவம் 24.07.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
எதிர்வரும் 01.08.2016 திங்கட்கிழமை அன்று தேர்த்திருவிழாவும்-மறுநாள் 02.08.2016 செவ்வாய்கிழமை ஆடிஅமாவாசை அன்று முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் -வேலணை சாட்டி வெள்ளைக்கடற்கரையில் தீர்த்தமாடும் தீர்த்தத் திருவிழாவும்-இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலணை வங்களாவடி முருகப்பெருமானின் வருடாந்த மகோற்சவத்தின் முக்கிய திருவிழாக்கள் அனைத்தும் அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்டு-உங்கள் பார்வைக்கு எடுத்து வரப்படவுள்ளது-என்பதனை அறியத்தருகின்றோம்.
பரிஸில் அமைந்துள்ள கீழ் வரும் நாணயமாற்று நிறுவனமே-வேலணை வங்களாவடி முருகனின் வருடாந்த மகோற்சவத் திருவிழாவின் பதிவுகளுக்கான நிதி அனுசரணையினை வழங்கியுள்ளனர்.